Skip to main content

இன்றுடன் முடிகிறது அயோத்தி வழக்கின் வாதங்கள்...

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இந்த மாதத்துடன் வாதங்களை அனைத்தையும் முடித்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கறிஞர்களை வலியுறுத்தியிருந்தார்.

 

final hearing of ayodhya case

 

 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம், வரும் நவம்பர் மாதம் முடிவடைய உள்ளதால், அதற்குள்ளாக தீர்ப்பினை அளிக்கும் நோக்கில், இத்தகைய அறிவுறுத்தல்களை பிறப்பித்ததாகக் கூறப்பட்டது. இந்தநிலையில் 40வது நாள் விசாரணையான இன்றுடன், இந்த வழக்கின் விசாரணை முடியும் என அவர் நேற்று அறிவித்தார்.

வரும் நவம்பர் 17 ஆம் தேதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீர்ப்பின் காரணமாக கலவரங்கள் ஏற்படலாம் என்பதால் அயோத்தியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில், தமிழகம், ஆந்திர, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்