உடலில் பட்டாலே பல்பு எரியும் அதிசயம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானா அடிலாபாத்தில் சிறசென்னார் அடுத்த ராம் நகரை சேர்ந்தவர் ஷேக்சாந்த்பாஷா. இவர் கடந்த வாரம் வாங்கி வந்த பல்பை எடுத்து அவரது மகனும், மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தெரியாமல் கை பல்பில் மின்சாரம் கொடுக்கும் பகுதியில்பட்டுள்ளது. அப்படி கை பட்டவுடன் அந்த பல்பு மின்சாரம் இல்லாமல் எரிவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். வேறு ஒரு பல்பை வாங்கி அதேபோல் சோதித்த பொழுதும் அந்த பல்பும் அவரது உடலில் பட்டவுடன் எரியத் தொடங்கியது.

இதேபோன்று ஷேக்சாந்த்பாஷாவின் உடலில் வைத்தாலும் பல்பு எரிந்தது. இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் பல்புகளை அவர்கள் மீது வைத்து சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் பாய்கின்ற வயரை பிடித்தால் மின்சாரம் பாயாமல் நிற்கும் மனிதர்களைக் கூட இதுவரை உலகம் கண்டிருக்கிறது. ஆனால் மனிதனின் உடலில் இருந்து இப்படி மின்சார பல்பு எரிவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.