Skip to main content

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு! 

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

Election Date Announced for the Presidency!

 

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று (09/06/2022) பிற்பகல் 03.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை மாதம் 25- ஆம் தேதி பதவியேற்பார். மாநிலங்களவைத் தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திர மோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். 

 

நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். நாடு முழுவதும் 776 எம்.பி.க்கள், 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க வேண்டும். இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் வரும் ஜூலை 21- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். 

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். குடியரசுத் தலைவருக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் ஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வரும் ஜூன் 29- ஆம் தேதி அன்று கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை வரும் ஜூன் 30- ஆம் தேதியும், வேட்பு மனுத் திரும்ப பெற வரும் ஜூலை 2- ஆம் தேதி கடைசி நாளாகும்" எனத் தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்