கேரளாவில் சில நாட்களாக தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருவதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பீர்மேடு, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்யும் இதே நேரத்தில் அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மலப்புரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மலை கிராமங்களில் பெய்துவரும் மழையினால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சபரிமலை பகுதியிலும் பலத்த பம்பையில் மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆடிமாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.