Published on 01/08/2020 | Edited on 01/08/2020
புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பல்கலைக்கழகங்கள் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் வழிகாட்டுதலின்படி, ஏற்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கல்விக்கொள்கை குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள தவறான புரிதல்களைப் போக்கும் விதமாக, இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பல்கலைக்கழகங்கள் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற சமூகவலைதளங்கள் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் இந்த விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ள நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.