தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அரசுப் பணியிடத்தில் மேலதிகாரிகளை ‘சார்’ என்று மரியாதையுடன் அழைப்பது வழக்கம். அதுபோல வட இந்தியாவில் ‘பாய்’ என்று மரியாதையுடன் மேலதிகாரிகளை அழைப்பார்கள். பாய் என்றால் தமிழில் மூத்த சகோதரர் என்று பொருள்படும்.
இந்நிலையில் மேலதிகாரிகளை பாய் என அழைக்கக்கூடாது என்று இளம் மற்றும் கீழ் அலுவலர்களுக்கு ஒடிசா மாநில அரசு அறுவுறுத்தலை வழங்கியுள்ளது.
அவ்வாறு கூறி, மூத்த அதிகாரிகள் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மூத்த அதிகாரிகளை சிலர் 'பாய்' என்று அழைப்பதாக வந்த புகாரை அடுத்தே, அதனைத் தடுக்க இது தொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அலுவலத்திற்குள் தனிப்பட்ட உறவுமுறைகளை சொல்லி அழைக்கக்கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.