Published on 06/05/2023 | Edited on 06/05/2023

இந்திய இராணுவத்தின் ஏ.எல்.எச். துருவ் எனும் ஹெலிகாப்டர் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டம், மர்வா பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்தின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் முதலில் தகவல் சொல்லப்பட்டது. அதேபோல், விபத்தில் சிக்கிய இராணுவ வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பப்பல்லா அனில் எனும் இராணுவ வீரர் உயிரிழந்தார்.
மே 4ம் தேதி நடந்த இந்த விபத்தில் இராணுவ வீரர் உயிரிழந்ததை அடுத்து, இந்திய இராணுவத்தின் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் பயன்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்படுவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.