Skip to main content

எந்தெந்த அமைச்சர்களுக்கு, எந்தெந்த இலாக்காக்கள் முழு விவர பட்டியல்!

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள் குறித்த முழு விவரங்கள். 


மத்திய அமைச்சர்கள் "Cabinet Ministers".

1. பிரதமர்  நரேந்திரமோடி:   ஊழியர், பொதுக் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை, அணு சக்தி துறை, விண்வெளித் துறை. அனைத்து முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பிரதமர் வசம் இருக்கும்.

2. ராஜ்நாத் சிங்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்.

3. அமித்ஷா: மத்திய உள்துறை அமைச்சர்.

4. நிதின் கட்கரி: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் மற்றும் சிறு, குறு, தொழில்துறை அமைச்சர்.

5. டி.வி. சதானந்த கவுடா: மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர்.

6. நிர்மலா சீத்தாராமன்: மத்திய நிதித்துறை அமைச்சர் மற்றும் கார்ப்ரேட் தொழில் துறை.

7. ராம்விலாஸ் பாஸ்வான்: மத்திய உணவுத்துறை அமைச்சர் மற்றும் 
நுகர்வோர் விவகாரம்,  பொது விநியோக அமைச்சர்.

8. நரேந்திர சிங் தோமர்: மத்திய வேளாண்துறை மற்றும் விவசாய நலன், கிராமப்புற மேம்பாடு துறை அமைச்சர், பஞ்சாயத்து ராஜ் துறை.

9. ரவி சங்கர் பிரசாத்: மத்திய சட்டத்துறை அமைச்சர், மத்திய மின்ணணு, தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர்.


10. ஹர்சிம்ராட் கவுர்: மத்திய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சர்.

11. தாவார் சந்த் கெலாட்: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்.

12. எஸ். ஜெய்சங்கர்: மத்திய வெளியுறவு துறை அமைச்சர்.

13. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்: மனித வள மேம்பாடு துறை அமைச்சர்.

14. அர்ஜூன் முண்டா: மத்திய பழங்குடியினர் நலத்துறை.

15. ஸ்மிரிதி இரானி: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு துறை அமைச்சர் மற்றும் மத்திய ஜவுளி துறை.

16. டாக்டர். ஹர்ஷ்வர்தன்: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, புவி அறிவியல் துறை.

17. பிரகாஷ் ஜவடேகர்: மத்திய சுற்றுச்ச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர்,மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர்.

18. பியூஸ் கோயல்: மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில்துறை.

19. தர்மேந்திர பிரதான்: மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் மற்றும் இரும்பு உருக்காலை அமைச்சர்.

20. முக்தர் அப்பாஸ் நக்வி: மத்திய சிறுபான்மை துறை அமைச்சர்.

21. ப்ரால்ஹாட் ஜோஷி: மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர்.

22. மஹேந்தரநாத் பாண்டே: மத்திய திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர்  அமைச்சர்.

23. அர்விந்த் சாவந்த்: மத்திய கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சர்.

24. கிரிராஜ் சிங்:  மத்திய கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்.

25. கஜேந்திர சிங் ஷெகாவத்: மத்திய ஜால் சக்தி என்ற அமைச்சர்.

 

 

 

pm cabinet

 

 

மத்திய இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) "Minister of state with Independent Charge".

1. சந்தோஷ் குமார் கங்வார்:  மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் மாநிலச் சார்பில் (தனிப்பொறுப்பு ).

2. ராவ் இந்திரஜித் சிங்: மத்திய புள்ளியியல் மற்றும் நிகழ்ச்சித் திட்ட அமலாக்க அமைச்சர் (தனிப்பொறுப்பு ).

3. ஶ்ரீபாத் நாயக்: மத்திய ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை பாதுகாப்பு, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி துறை, பாதுகாப்பு அமைச்சர் (தனிப்பொறுப்பு ).

4. ஜிதேந்திர சிங்: மத்திய வடக்கு கிழக்கு மாகாண மேம்பாடு  துறை, பிரதமர் அலுவலக துறை, ஊழியர், பொதுக் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் வெளியுறவு அமைச்சர், விண்வெளி துறை, அணுசக்தித் துறையின் அமைச்சர் (தனிப்பொறுப்பு ).

5. கிரண் ரிஜிஜூ:  மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு ).

6. ப்ரஹ்லாத் சிங் படேல்: மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு).

7. ஆர்.கே. சிங்: மத்திய மின்துறை மற்றும் புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை , தொழில் முனைவோர் துறை , திறன் மேம்பாடு அமைச்சர் (தனிப்பொறுப்பு ).

8. ஹர்தீப் சிங் பூரி: மத்திய நகர்ப்புற மேம்பாடு, விமானத்துறை, வர்த்தகம், கைத்தறி துறை  (தனிப்பொறுப்பு ).

9. மன்சூக் எல் மாண்டவியா. மத்திய கப்பல், ரசாயன மற்றும் உரத்துறை (தனிப்பொறுப்பு ).

 

 

 

cabinet

 

 


மத்திய இணையமைச்சர்கள் "Minister Of State".

1. ஃபாக்கான் சிங் குலாஸ்த் : மத்திய இரும்பு உருக்காளை துறை இணையமைச்சர்.

2. அஸ்வினி குமார் சௌபே: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர். 

3. அர்ஜூன் ராம் மெக்வால்: மத்திய நாடாளுமன்ற விவகாரம், கனரக தொழில்துறை, பொது நிறுவனங்கள் துறை 
இணையமைச்சர். 

4. வி.கே. சிங்: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இணையமைச்சர். 

5. கிரிஷான் பால்:  மத்திய சமூக நீதித்துறை  இணையமைச்சர். 

6. ராவோசேப் டேன்வ்: மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர். 

7. ஜி. கிஷான் ரெட்டி: மத்திய உள்துறை இணையமைச்சர்.

8. பர்ஷோத்தம் ரூபலா: மத்திய வேளாண் துறை  மற்றும் விவசாய நல இணையமைச்சர்.

9. ராம்தாஸ் அத்வாலே: மத்திய சமூக நீதி நலத்துறை இணையமைச்சர்.

10. சாத்வி நிரன்ஞன் ஜோதி: மத்திய கிராமப்புற மேம்பாட்டு இணையமைச்சர்.

11. பாபுல் சுப்ரியோ: மத்திய சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, பருவநிலை மாற்றம்  இணையமைச்சர்.

12. சஞ்ஜீவ் பால்யான்: மத்திய கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளர்ப்பு துறை இணையமைச்சர்.

13. டோத்ரே சஞ்ஜய் சாம்ரோ: மத்திய மனிதவள மேம்பாடு, மின்ணணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர்.

14. அனுராக் தாகூர். மத்திய நிதித்துறை, கம்பெனிகள் துறை இணையமைச்சர்.

15. சுரேஷ் அங்காடி: மத்திய ரயில்வே துறை இணையமைச்சர்.

16. நித்யானந்த் ராய்: மத்திய உள்துறை இணையமைச்சர்.

17. ரட்டன் லால் கடரியா: மத்திய ஜால் சக்தி, சமூக நீதித்துறை இணையமைச்சர்.

18. வி. முரளிதரன்: மத்திய வெளியுறவு துறை, நாடாளுமன்ற விவகாரம் இணையமைச்சர்.

19. ரேணுகா சிங் சர்குஜா: மத்திய பழங்குடியினர் விவகார நலத்துறை இணையமைச்சர்.

20. சோம் பிரகாஷ்: மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர்.

21. ரமேஷ்வர் டேலி: மத்திய உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை துறை இணையமைச்சர்.

22. பிரதாப் சந்திரா சரங்கி: மத்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, வெளியுறவு மற்றும் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர்.

23. கைலாஷ் செளத்ரி: மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை இணையமைச்சர்.

24. திபா ஶ்ரீ செளத்ரி: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சர்.

 

 


 

சார்ந்த செய்திகள்