Published on 12/12/2020 | Edited on 12/12/2020

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், இன்றுடன் 17 ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, 'அகில இந்திய கிஸான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு' என்ற விவசாயிகள் குழு, குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாத சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள், குறைந்தபட்ச ஆதார விலை குறித்த உறுதி வேண்டும். அதன் கீழ் நாங்கள் விளைவித்தவை வாங்கப்படுவதற்கான உத்தரவாதம் எங்களுக்கு வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாத மசோதாவை, நீங்கள் கொண்டு வந்தால், அது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் எனக் கூறியுள்ளனர்.