புதுச்சேரியில் பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட பழமையான துறைமுக பாலம் சேதமடைந்தது.
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் துறைமுகம் மூலமாக வணிகம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட 60 ஆண்டு பழமையான துறைமுக பாலம் சேதமடைந்துள்ளது. வம்பாகீரப்பாளையம் என்ற கடற்கரை பகுதியில் 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த துறைமுக பாலம் 1962 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. காலப்போக்கில் இந்த பாலம் பயன்பாட்டில் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கும் இடமாக மட்டுமே இருந்தது. அதேபோல் சினிமா படப்பிடிப்புகளுக்கு இந்த பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த பாலத்தின் தூண்கள் பலவீனமாக இருந்த நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக பாலத்தின் மையப்பகுதி சேதமடைந்தது. 60 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.