Published on 16/12/2020 | Edited on 16/12/2020
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் 8- ஆம் தேதி முதல் டிசம்பர் 14- ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இதன் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. இந்த மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சியைக் கைப்பற்றப்போடுவது யார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.