Published on 21/09/2018 | Edited on 21/09/2018
உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று பசுவை தேச அன்னையாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. எதிர் கட்சியான காங்கிரஸ் இதனை விமர்சித்து வந்தாலும், நேற்று இந்த தீர்மானத்தை எதிர்க்கவில்லை. அம்மாநில கால்நடைத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா, உலகிலேயே சுவாசிக்கும்போது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து, அதை வெளியிடும் ஒரே விலங்கினம் பசு என்று உத்ரகாண்ட் சட்டமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, கோமியத்தின் சிறப்புகளை தெரிவித்து, பின் குழந்தைகளுக்கு தாய்பாலுக்கு அடுத்த படியாக பசும்பாலை கொடுக்கலாம் எனவே பசு என்பது தாய்மையின் சின்னம் என்று கூறியிருக்கிறார்.