டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை 5 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு குறித்து பாரத பிரதமர் மோடி குறிப்பிடுகையில், ஜனநாயகத்திற்காக போராடியவர் வாஜ்பாய். என்னுடைய தந்தை போன்றவரை நான் இழந்து விட்டேன். வாஜ்பாய் எனும் சகாப்தத்தை இழந்து விட்டோம், விலைமதிப்பற்ற ரத்தினத்தை நாடு இழந்து விட்டது என உருக்கமாக உரையாற்றினார்.
தொடர்ந்து அவரது உடலுக்கு தேசிய தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.