வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பீகார், அசாம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 1 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசாம் மாநிலத்தில் மட்டும் 50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் ஜம்மூ- காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நெடுஞ்சாலையில் மண்சரிந்து வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்குப்பட்டது. ஜம்மு- காஷ்மீரில், தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கு மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த மாநில தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட மண் சரிவால் சரக்கு வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன.
தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், கொட்டும் மழையில் சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் ரம்பன் மாவட்டத்தின் ராம்சாவ் பகுதியில் உள்ள பாந்தியல் ஆகிய இடங்களில் காலை முதல் நிலச்சரிவு காரணமாக ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த வழியே சென்ற நபர் ஒருவர் சிக்கி கொண்டார். நிலச்சரிவில் அவர் மண்ணுக்குள் புதைந்து போயுள்ளார். இந்த நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 72வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் அஜாக்சி என்ற மோப்ப நாய் சென்றுள்ளது.
அது, மண்ணில் புதைந்து போன நபரின் இருப்பிடம் பற்றி வீரர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அந்த பகுதிக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் உடனடியாக சென்று மண்ணில் புதைந்திருந்த நபரை மீட்டுள்ளனர். பின்பு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் யாத்ரீகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
#WATCH CRPF personnel of 72nd Battalion rescue a man trapped in landslide on Jammu-Srinagar highway near milestone 147. On following cue from CRPF dog, the troops found a man trapped in debris of the landslide which had occurred last night. The man has been admitted to hospital. pic.twitter.com/JFBP7agak0
— ANI (@ANI) July 31, 2019