Published on 25/04/2020 | Edited on 25/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
![Coronal rises to 779 in India](http://image.nakkheeran.in/cdn/farfuture/7PqScqO82qxdSR8B2Iu3KgzTiDYqztr8FkSIZWGvDWc/1587817643/sites/default/files/inline-images/tyryu7rhf.jpg)
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 775 லிருந்து 779 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனவில் இருந்து 5,210 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை 24,506 இருந்து 24,942 ஆக உயர்ந்துள்ளது.