மருத்துவமனைக்கு பின்புறம் கேட்பாரற்று கிடக்கும் காலியிடத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பீகாரில் உள்ள மூசபாவூரில் நடந்துள்ளது. அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் காலியிடம் உள்ளது. அந்த காலியிடத்தில் மண்டை ஓடுகள், கை மூட்டு எலும்புகள் என துணி சுற்றப்பட்ட பல எலும்புக்கூடு குவியல்கள் சர்வ சாதாரணமாக தென்பட்டது. ஏற்கனவே அந்த மருத்துவமனை எட்டாயிரம் ரூபாய்க்கு மனித எலும்பு கூடுகளை விற்றதாக கடந்த 2016 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
சடலங்களை துப்புரவு பணியாளர்களே எலும்புக்கூடுகளாக மாற்றி விற்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. ஏற்கனவே என்செபிலிட்டிஸ் மூளை காய்ச்சலில் இந்த மருத்துவமனையில் 108 குழந்தைகள் இறந்து சர்ச்சைக்கு பெயர் போன இந்த மருத்துவமனையில் இப்படி எலும்புக்கூடுக்கள் குவியல்களாக கிடப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.