இந்தியாவில் இதுவரை 2.86 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று (05.06.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 2,86,93,835 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (04.06.2021) ஒரேநாளில் 1,20,569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒருநாள் தொற்று எண்ணிக்கை 1.32 லட்சமாக இருந்தது. நேற்று 1.20 லட்சமாக மீண்டும் குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 1,97,894 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,67,95,549 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.38 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,380 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,44,082 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு 15,55,248 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.