Published on 07/07/2018 | Edited on 07/07/2018

சவுராஷ்டிரா படேல் சமூகத்தின் கலாச்சார மாநாடு அமெரிக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, ஹோட்டல் மோட்டல் வாலா என்று அச்சமூகத்தினரை விளையாட்டாக கிண்டல் செய்துள்ளார்.
அமெரிக்காவில் படேல் சமூகத்தினர் அதிகமாக வசித்து வருகின்றனர். அச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் அங்கு ஹோட்டல்களை நடத்திவருகின்றனர். அதனால், அங்கு அவர்களை 'ஹோட்டல் மோட்டல் வாலா' என்று அழைப்பது வழக்கம். அமெரிக்காவில் சவுராஷ்டிரா படேல் கலாச்சார மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் காணொளியின் மூலம் பேசிய மோடி, "ஹோட்டல் மோட்டல் வாலாக்கள் நினைத்தால், இந்திய சுற்றுலாவுக்கு மிகப்பெரிய பங்களிக்க முடியும்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டவுடன் அங்கிருந்த படேல் சமூகத்தினர் குதூகலமாகி கரகோசத்தை எழுப்பினர். இதன்மூலம் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.