கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் அப்போதைய கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். அதன் பிறகு சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார். முழு நேரத் தலைவரை தேர்ந்தெடுக்க அக்டோபர் 17ம் தேதி கட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சசிதரூர் மற்றும் கார்கே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் காங்கிரஸின் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 19ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் கார்கே வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று மாலை அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், " நான் மிகவும் உணர்ச்சிகரமான மனநிலையில் இருக்கிறேன்.ஒரு தொழிலாளியின் மகன் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் மட்டுமே சாத்தியம்" என்றார்.