மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அணிக்காக பெரும்பாடுபட்ட சந்திரபாபு நாயுடு நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 16 இடங்களில் வென்ற தெலுங்குதேசம் இந்த முறை ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெறவில்லை. அதுபோல சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 88 தொகுதிகள் தேவை. ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 175 ல் 144 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு கட்சி வெறும் 30 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.
எனவே நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்த சந்திரபாபு நாயுடு விரக்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.