Skip to main content

கேரளா விரைந்த மத்திய குழு - ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

central team i kerala

 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்தியாவிலயே தற்போது கேரளாவில்தான் அதிக கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.

 

இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்து வரும் முயற்சிக்கு உதவும் வகையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரளாவிற்கு அனுப்பவுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் தற்போது கேரளா விரைந்துள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் தலைமையிலான மத்திய குழு, முதற்கட்டமாக ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு வருகை தந்து, அம்மாவட்டத்தில் எடுக்கப்படவேண்டிய கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்