பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் சோம்நாத் பகுதியில் நடைபெறவுள்ள பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். இதில் பார்வதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதும் அடங்கும். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தால் நம்பிக்கையை ஒடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு;
நாம் மத சுற்றுலாவை வலுப்படுத்த வேண்டும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும். நமது கடந்த காலத்தைப் பற்றிய அறிவையும் அவர்கள் பெறுவார்கள். பயங்கரவாதத்தால் நம்பிக்கையை ஒடுக்க முடியாது. நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் 'பாரத் ஜோடோ அந்தோலன்' (ஒற்றுமை இந்தியா இயக்கம்) பற்றி பேசும்போது, அது வெறும் புவியியல் மற்றும் கருத்தியல் தொடர்பு பற்றியது மட்டுமல்ல. நமது வரலாற்று பாரம்பரியத்துடன் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழி. நமது புதிய இந்தியாவின் வலுவான தூணாக ராமர் கோயில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.