மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டுக்கு வரிப் பகிர்வாக ரூ. 2,976.10 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரு. 13,088.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு ரூ. 5,488.88 கோடி, ஆந்திராவுக்கு ரூ. 2,952 கோடி, கர்நாடகாவுக்கு ரூ. 2,660 கோடி, குஜராத்துக்கு ரூ. 2,537 கோடி என மொத்தமாக ரூ. 72,961.21 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. மாநில அரசுகளுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை டிசம்பர் 11-ம் தேதியே மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைகள், வருடப் பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகைகள் வர உள்ளதால், மாநில அரசுகளின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சிக்கான மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.