Published on 31/07/2019 | Edited on 31/07/2019
விவசாயிகளுக்கு உரங்களுக்காக வழங்கப்படும் மானியத்தை 20 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![central government raises subsidy for fertilizers](http://image.nakkheeran.in/cdn/farfuture/DIWxwctrgWF7wbj5z-QIe0zv8X9Kw71vKJteTGBq7Ik/1564568488/sites/default/files/inline-images/farming.jpg)
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள இந்த 20 சதவீத உர மானியத்திற்காக ரூ.28,875 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.