Published on 29/01/2019 | Edited on 29/01/2019
![tgdfdr](http://image.nakkheeran.in/cdn/farfuture/r7KZ1Dky3cQDZMMbvVX2KBH7Nh5C-7wDrMBtWDZgTZY/1548760440/sites/default/files/inline-images/supreme-court--in_4.jpg)
அயோத்தி வழக்கில் மத்திய அரசு சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய இடத்தை தவிர மற்ற இடங்களை மத்திய அரசித்தம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தில் 0.313 ஏக்கர் மட்டுமே சர்ச்சைக்குரிய நிலம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் ராமர் கோயிலை கட்டுவதற்கான பணியை விரைந்து தொடங்கும் நோக்கிலேயே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.