Published on 20/02/2020 | Edited on 20/02/2020
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய்குமார் சர்மா தூக்கு தண்டனையை தாமதப்படுத்த தனக்குத்தானே காயத்தை ஏற்படுத்திகொண்டதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி இருமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்ட சூழலில், தற்போது இந்த தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியாக குற்றவாளி வினய் குமார் சர்மா, கடந்த 16 ஆம் தேதி, தலையை சுவற்றில் மோதி காயத்தை ஏற்படுத்திக்கொண்டதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.