மக்களவை தேர்தல் பரபரப்புகள் குறைந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர் பாஜக பற்றி கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![bsp mla ramabai complaints against bjp](http://image.nakkheeran.in/cdn/farfuture/5g_6IGl9N8Oik3kOV-YSU5XXtZM6LNe3lbFs1cMEMoA/1558956137/sites/default/files/inline-images/ramab.jpg)
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. 231 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணியமைத்து ஆட்சியில் உள்ளன. 109 இடங்களை தனித்து கைப்பற்றிய பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பாஜகவுக்கு இன்னும் 7 எம்.எல்.ஏ க்கள் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையில் பாஜக பணம் கொடுத்து எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்க பார்க்கிறது என பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராமாபாய் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "அனைத்து எம்.எல்.ஏ க்களுடனும் பேசி ஆசை வார்த்தை காட்டுகின்றனர். ஆனால் முட்டாள்கள் தான் அவர்களது அணிக்கு செல்வார்கள். என்னை தொடர்புகொண்ட அவர்கள் அமைச்சர் பதவியும், பணமும் தருவதாக கூறினர். 50 முதல் 60 கோடி ரூபாய் வரை பணம் தருவதாக கூறி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.