உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் கரோனா விவகாரத்தில் நாட்டில் தவறான எண்ணங்களுடன் வகுப்புவாத வைரஸை பாஜக பரப்பி வருகிறது. பாரபட்சமாக, மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்கிறது. பாஜகவின் இந்த செயல் நாட்டின் ஒவ்வொரு இந்தியரையும் கவலையடைய செய்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல் சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கும், புல்லட் ரயில் திட்டத்திற்கும் மத்திய அரசு வீணாக செலவழிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கரோனா வைரஸூக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி மோடி அரசுடன் போராடுகிறது. இதுதான் காங்கிரஸின் செயல்பாடு" என தெரிவித்துள்ளார்.