Skip to main content

விமான கழிவறையில் சிசுக்கரு வீசியெறிந்த சம்பவம்; தான் கர்ப்பம் தரித்ததே தெரியாது-விளையாட்டு வீராங்கனை

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
air asia

 

 

 

விமான கழிப்பறையில் பெற்ற குறைமாத சிசுக்கருவை வீசியெறிந்த சம்பவத்தில் டேக்வோண்டோ விளையாட்டு வீராங்கனை விசாரிக்கப்பட்டுவந்தார். இந்நிலையில் தான்தான் அந்த செயலை செய்ததாகவும், தனக்கு தான் கர்ப்பமாக இருந்ததே தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். 

 

மணிப்பூரிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த ஏர் ஆசியா விமானத்தில் மணிப்பூர்-டெல்லி இடைப்பட்ட பயணத்தின் பொழுது விமான பணியாளர் ஒருவர் விமானக் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது கழிவறையில் ரத்தக்கறையுடன் குறைமாத சிசு ஒன்று இறந்த நிலையில் கழிவறையில் வீசி சென்றிருப்பதை கண்டு அதிர்ந்து விமான பயணிகளிடமும், ஊழியர்களிடமும் தெரிவித்துள்ளார் அந்த பணியாளர்.

 

 

 

அந்த சிசுவிற்கு பயணிகள் யாரும் முன்வந்து பொறுப்பேற்காததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விமானம் தரையிறங்கியவுடன் போலீசார் பயணிகளை இது தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள் விசாரித்தனர். இந்த விசாரணைக்கு பிறகு ஆண் பயணிகள் முதலில் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பெண் பயணிகளிடம் நடத்திய விசாரணையில் 19 வயதுடைய இந்திய விளையாட்டு வீராங்கனை தான்தான் அந்த குழந்தையை கழிவறையில் பிரசவித்து வீசி எறிந்தேன் என தெரிவித்துள்ளார். அந்த 19 வயதுடைய வீராங்கனை யார் என்பது பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடாத நிலையில் டேக்வோண்டோ விளையாட்டு வீராங்கனையான அவர் தனக்கு தான் கர்ப்பமாக இருந்ததே தெரியாது என தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டில் அடிபட்டு காயம் ஏற்பட்டதால் வலிநிவாரண மருந்து உட்கொண்டதாக விசாரணையில் தெரியவந்ததால் அந்த மருந்து கருவை அழிந்திருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

விசாரணையில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டு வீராங்கனையின் பாஸ்போர்ட்டை போலீசார் கையப்படுத்தியதால் தென்கொரியாவில் நடக்கும் விளையாட்டு போட்டியில் அவர் கலந்துகொள்ள முடியாது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.   

சார்ந்த செய்திகள்