Skip to main content

விஐடி அத்வித்யா 2025; வருடாந்திர கலாச்சார் விழா!

Published on 26/02/2025 | Edited on 26/02/2025

 

 VIT Bhopal University - AdVITya 2025

விஐடி போபாலில் 'விஐடி அத்வித்யா 2025' என்ற வருடாந்திர கலாச்சார திருவிழாவில் பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது பெற்ற சாதனையாளர்களுக்கு எம்பி கவுரவ் விருதுகளை, விஐடி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், விஐடி போபால் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.

விஐடி போபாலில் 'விஐடி அத்வித்யா 2025' என்ற வருடாந்திர கலாச்சார மற்றும் தொழில்நுட்ப திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் விழாவை அர்ஜூனா விருது பெற்ற ஜூடோ வீரர் கபில்பார்மர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு விஐடி உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி போபால் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். 

நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் ஆகியோரின் வாழ்த்துரை வழங்கி பேசினர். தொடர்ந்து ஸ்டண்ட் கலைஞர்கள் பைக் சாகசங்களை நிகழ்த்தினர். இதையடுத்து பிரபல பாடகர ரகுதீட்சித்தின் 'பாரசிவா, 'கிட்கி' மற்றும் 'ஷக்கர் பாரி பாடல்கள் இசைக்கப்பட்டன. 

விழாவின் 2ம் நாளில் கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலை மாணவர்கள் வெளிப்படுத்தும் வகையில்‘ரங்க்-இ-ராஸ்' என்ற நடன இரவு நிகழ்ச்சியில் விஐடி போபால் வளாக நடன கிளப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற குஜராத்தி கர்பா தொடங்கி பாலிவுட்டின் பீட்ஸ், இந்திய கிளாசிக்கல் நடனம் மற்றும் பாடல் நிகழ்வுகள் நடந்தது. தொடர்ந்து படைப்பாற்றல் தொடர்பான போட்டிகள் நடந்தது. 

'அத்வித்யா 2025ன் இறுதி நாளில் பல்வேறு துறைகளில் பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகள் பெற்ற சாதனையாளர்கள் பூரிபாய், துர்காபாய்வியாம், பகவதிலால் ராஜ்புரோகித், கலூராம் பாமணியா, சத்யேந்திரசிங்லோஹியா, கபில் திவாரி. அவ்னீஷ் திவாரி, பன்வாரிலால் சவுக்சே, கபில் பார்மர், பேருசிங் முனீஸ்வர்சிங் தவார் ஆகியோருக்கு எம்பி கவுரவ் விருதுகளை விஐடி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து டிஜே லெஹரின் பாலிவுட் ரீ மிக்ஸ் பாடல் கள். இடிஎம் இசை நிகழ்ச்சி நடந்தது. விஐடி போபாலின் அத்வித்யா 2025வின் 3 நாள் விழாவின் இறுதியில் போட்டியாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட் டன. விழாவில் 53 தொழில்நுட்ப மற்றும் 59 தொழில்நுட்பம் அல்லாத போட்டிகள், மெய்நிகர் காட்சிப் பெட்டிகள் மற்றும் திரில்லிங் நிகழ்ச்சிகள் உட்பட 131 பரபரப்பான நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவில் மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவை யோகேஷ்சுக்லா தலைமையில் புஷ்ப்தண்ட் ஜெயின் சவுரவ் பிரசாத் ஆகியோர் 
ஒருங்கிணைத்தனர்.

சார்ந்த செய்திகள்