Published on 02/03/2019 | Edited on 02/03/2019

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணாகடி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு திடீரென பாகிஸ்தானால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அந்த பகுதியில் உள்ள வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இறந்துள்ளனர். இந்த தாக்குதலில் அவர்களின் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. அமைதிக்கான நடவடிக்கையாக அபிநந்தனை விடுதலை செய்வதாக கூறி 24 மணிநேரத்திற்க்குள் நடைபெற்ற இந்த தாக்குதல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.