Published on 02/04/2021 | Edited on 02/04/2021

தமிழகத்தில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீடு, திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியின் வீடு என திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "தேர்தல் தோல்வியைச் சந்திக்கும்போது பாஜகவின் சமாளிக்கும் வழிமுறையே, எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்படும் சோதனை" எனத் தெரிவித்துள்ளார்.