இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரதரத்னா விருது இந்த ஆண்டு யார்யாருக்கு வழங்கப்பட உள்ளன என்பது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புகழ்பெற்ற பாடகர் பூபேன் ஹசிகா மற்றும் இறந்த சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது பற்றி பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, 'இதுவரை வழங்கப்பட்ட பாரதரத்னா விருதுகளில் தலித், ஆதிவாசி, முஸ்லீம், உயர் ஜாதி மற்றும் பிராமணர் இவர்களில் எந்த பிரிவினருக்கு இந்த விருதுகள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளன? அம்பேத்கருக்கு பாரத ரத்னாவுக்கு வழங்கப்பட்டது கூட கட்டாயத்தால் தானே தவிர, மனப்பூர்வமாக வழங்கப்படவில்லை' என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பொதுமக்கள் மற்றும் அம்பேத்கர் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.