Published on 27/05/2018 | Edited on 27/05/2018

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளதாவது, எனது பிறந்தநாளன்று யாரும் எனக்கு ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அதை நான் என சொந்த செலவில் அகற்றுவேன். அறிவுறுத்தலையும் மீறி யாராவது பேனர்கள் வைத்தால் கட்சி சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கும் என்றும் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.