பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஹரிஷ் குரானா தனது த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா 3 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
![aravind](http://image.nakkheeran.in/cdn/farfuture/HY7bo0h8Db9ma-nwdRmjRdNnt98-ABZxTcdmHgaA9fM/1556361762/sites/default/files/inline-images/arvind4.jpg)
டெல்லியின் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் 2 தொகுதிகளில் வாக்குரிமை பெற்றுள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் ஹரிஷ் குரானா, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவிக்கு 3 வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. டெல்லி சாந்தினி சவுக் தொகுதி, உத்தரபிரதேசத்தின் கசியாபாத், மேற்குவங்கத்தில் கொல்கத்தா வடக்கு தொகுதியிலும் அவர் வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளார் என கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆம்ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், முதல்வரின் மனைவி தனிநபர். அவர் அரசியலில் இல்லை. அதனால் அந்த விவகாரத்தை இதனுடன் ஓப்பிட வேண்டாம். அப்படி இரண்டு விஷயங்களை ஒப்பிட வேண்டும் என பாஜக விரும்பினால், 2019 தேர்தலில் இருந்து காம்பீர், கெஜ்ரிவாலின் மனைவி இருவரையுயே தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.