![gfh](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xt-kRiTA7081P-ml8CuKPYKmaVkBbYCu2Wtazp37j8A/1594487000/sites/default/files/inline-images/df_9.jpg)
ஆம்புலன்ஸ் வாகனத்தை நடிகை ரோஜா ஓட்டிய சம்பவம் தற்போது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படத்தியுள்ளது. நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா அடிக்கடி ஏதாவது பரபரப்பில் சிக்கிக்கொள்வது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகின்றது.
ஆந்திராவில் சில தினங்களுக்கு முன்பு அனைத்து வசதிகளை உள்ளடக்கிய 108 ஆம்புலன்ஸ் சேவையை, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை தன்னுடைய நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நடிகை ரோஜா தொடங்கி வைத்தார். புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் ஆம்புலன்ஸ் வாகனத்தை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரே ஓட்டினார். இந்த சம்பவத்தை தற்போது எதிர்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. “ரோஜா அவசரகால ஊர்தியை ஓட்ட லைசென்ஸ் வைத்துள்ளாரா, சாகசம் செய்ய வேறு இடமே அவருக்கு கிடைக்கவில்லையா" என்று அம்மாநில எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.