Skip to main content

திருப்பதியில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

tpty


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 73 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 
 


இதுவரை நான்கு கட்ட ஊரடங்கு முடிவடைந்து 5 ஆம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த ஊரடங்கில் கொடுக்கப்பட்ட தளர்வின் அடிப்படையில் இந்தியா முழுவதும் சில இடங்களைத் தவிர்த்து கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பதி கோயிலில் சோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதிப்பது என்று ஆந்திர அரசு சில தினங்களுக்கு முன்பு முடிவெடுத்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்றில் இருந்து அனைத்து பக்தர்களும் சாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்கள் ஆன் லைனிலும் விற்கப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்