டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
![akilesh yadav about jnu issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/1LywWUto0yXUOtxr3pPGnoKWr-y8RfPTmjy6gf4nIas/1578308796/sites/default/files/inline-images/bhfxhfgbnhfxg.jpg)
முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "முகமூடி அணிந்தவர்கள் டெல்லியில் உள்ள ஜே.என்.யு வளாகத்திற்குள் நுழைந்து, தங்கள் திட்டமிட்டபடி எப்படி அழிவை ஏற்படுத்தினர் என்பதை நம் நாடு மட்டுமல்ல உலகமே பார்த்தது. இதற்கு நியாயமான விசாரணை தேவை, ஏனெனில் இதன் பின்னணியில் யார் முக்கிய சதிகாரர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.