மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC PRELIMINARY EXAM- 2020) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2,569 மையங்களில் நடைபெற்று வரும் தேர்வை 10.58 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்ட மையங்களில் 50,000- த்திற்கும் மேற்பட்டோர தேர்வை எழுதுகின்றனர்.
குறிப்பாக சென்னையில் 62 தேர்வு மையங்களில் 22,000 பேர் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை எழுதுகின்றனர். அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 தேர்வு மையங்களில் 2,913 பேர் யுபிஎஸ்சி தேர்வை எழுதுகின்றனர்.
இன்று (04/10/2020) காலை 09.30 மணிக்கு முதற்கட்ட தேர்வு தொடங்கிய நிலையில், பிற்பகல் 02.30 மணிக்கு இரண்டாம் கட்டத்தேர்வும் நடத்தப்படுகிறது.
கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; தேர்வர்கள் உடல்வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.மேலும், ஹால் டிக்கெட், அடையாள அட்டை சரிபார்ப்புக்கு பின் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.