விமான பயணி ஒருவர் தும்மியதால், அவருக்கு கரோனா இருக்குமோ என்ற பயத்தால் விமான பைலட் காக்பிட்டிலிருந்து ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளார்.
உலகம் முழுவதும் 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,37,553 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ள நிலையில், 18,000க்கும் மேற்பட்டோருக்குச் சோதனை செய்யப்பட்டதில் 415 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏர் ஏசிய விமானத்தில் பயணி ஒருவர் தும்மியதால் அவருக்கு கரோனா இருக்குமோ என்ற பயத்தால் விமான பைலட் காக்பிட்டிலிருந்து ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளார்.
புனேவில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசிய விமானத்தில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தும்மியதால் அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வாசல் வழியாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானி வாசல் வழியாக இறங்க வேண்டும் அல்லது அவசர வழியாக இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து விமானி காக்பிட்டிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே குதித்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பயணிக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், அவருக்கு கரோனா இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
AirAsia pilots exit aircraft from the cockpit after suspected coronavirus passenger on board. https://t.co/ImZKEszEsg pic.twitter.com/9izGGCwsoB
— Breaking Aviation News (@breakingavnews) March 22, 2020