
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.
இன்று மட்டும் கேரளாவில் 722 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 157 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 62 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளா வந்தவர்கள். 501 பேருக்கு தொடர்புகள் மூலம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் இருவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 37 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,275 ஆக உயர்ந்துள்ளது. இன்று 228 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,862 ஆக உயர்ந்துள்ளது.