Skip to main content

எகிப்தில் இருந்து 6,090 டன் 'வெங்காயம்'- இறக்குமதி செய்ய முடிவு!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் எகிப்த் நாட்டில் இருந்து 6,090 டன் வெங்காயம் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 6,090 tonnes of onion imports from Egypt- Government decision

 

தற்போது வெங்காயத்தின் விலை ரூபாய் 100 வரை விற்பனை செய்யப்படுவதால் எகிப்த் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவிருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் கப்பல் மூலம் எகிப்தில் இருந்து மும்பை வந்துசேர உள்ளது.

இறக்குமதியாகும் வெங்காயம் மாநில அரசுகளுக்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். மாநில அரசுகள் அந்த வெங்காயத்தை நியாய விலையில் அல்லது மானியம் அளித்து சலுகை விலையில்  விற்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்