மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுபோல தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளாலும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி 1991 முதல் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்ற காந்தி நகர் தொகுதி அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் பாஜக தலைமையை விமர்சித்து வந்தது. இதனை தொடர்ந்து நேற்று அத்வானி அவரது இணைய பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். இதில் அவர் தற்போது பாஜகவில் நடப்பது குறித்தும், மோடி அமித்ஷா தலைமை குறித்தும் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்ற கருத எழுந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அத்வானியின் இல்லத்தில் அவருடன் முரளிமனோகர் ஜோஷி தற்போது சந்தித்து பேசியுள்ளார்.