டெல்லியில் கரோனா எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் சூழலில், கரோனா பதித்தவர்களை தனிமைப்படுத்த இன்று டெல்லியில் சுமார் 300 ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் கடத்த இரு வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், இதில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்திய தலைநகரான டெல்லி. டெல்லியில் மட்டும் இதுவரை 41,000 க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை போக்கும் வகையில் டெல்லிக்கு 500 ரயில்பெட்டி கரோனா வார்டுகள் அனுப்பப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி, இன்று முதற்கட்டமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக டெல்லிக்கு சுமார் 300 ரயில்பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ரயில்பெட்டிகள் டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலைய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வடக்கு ரயில்வே மக்கள் தொடர்பாளர், "லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள் மட்டுமே இங்கு வைக்கப்படுவார்கள். ரயில் பேட்டி பராமரிப்பு மற்றும் நோயாளி சிகிச்சையளித்தல் ஆகியவை மாநில அரசால் செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.