Published on 04/12/2018 | Edited on 04/12/2018
தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலின் போது நடக்கும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரை, சரியான ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட 110 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கடைசியாக ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின் பொழுது மொத்தமாக பிடிக்கப்பட்ட தொகையை விட இது 28 கோடி அதிகம். இன்னும் தேர்தல் நடக்க மூன்று நாட்கள் உள்ள நிலையில் மேலும் பணம் கைப்பற்றப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.