Published on 20/10/2020 | Edited on 20/10/2020
![prime minister narendra modi national addressing for today](http://image.nakkheeran.in/cdn/farfuture/RgCjtkVGspLgMnallam-s2u-6omplnnE8rV6yzxZptw/1603180900/sites/default/files/inline-images/pm4.jpg)
நாட்டு மக்களிடம் இன்று (20/10/2020) மாலை 06.00 மணிக்கு, உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா சூழலில் ஆயுதப்பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளது. மற்றொருபுறம், கரோனாவுக்கான தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியை இந்தியா முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை, பிரதமர் உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.