நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவ, மாணவியர்களுக்கு விதிக்கப்பட்ட கடும் கெடுபிடியினால் அவதிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகினர்.
பல நிறங்களில் டிசைன் போட்ட ஆடைகள் அணிந்து வர மாணவிகளுக்கு அனுமதியில்லை. தரையில் அணிந்திருந்த ஹேர்பின்கள், ஹேர்பேண்டுகளூக்கும் அனுமதியில்லை. தோடு, துப்பட்டாவுக்கும் அனுமதியில்லை. கடிகாரம், சாமி கயிறுகள், பூணூல், மணி,மாலைக்கும் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவுக்கும் அனுமதியில்லை. கூந்தல் பின்னலுக்கு அனுமதியில்லை என்பதால் மாணவிகள் கூந்தல் பின்னலை அவிழ்த்து தலைவிரி கோலமாக சென்றனர். மேலும், மாணவர்களின் காதுகளுக்குள் டார்ச் அடித்து பார்ப்பது, மீசைக்குள் டார்ச் அடிப்பது போன்ற கடும் நெருக்கடிகளால் மாணவ, மாணவியர் மன உளைச்சலுக்கு
ஆளானார்கள்.
சோதனை என்ற பெயரில் மாணவிகளை துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நீட் தேர்வின்போது மாணவ,மாணவிகளை சோதனை செய்தது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மற்றும் சிபிஎஸ்.இ. 6 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.