Published on 27/02/2020 | Edited on 27/02/2020
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்தைத் திரும்ப பெற கோரியும், தமிழக சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இஸ்லாமியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டம் 13 வது நாளாக நீடிக்கும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் சந்தித்தனர்.