’கமல்-60’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்றார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள், ஆனால் அதிசயம் நடந்துள்ளது, ஆட்சி தொடர்கிறது. அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும் என்று தெரிவித்தார். வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் அதிசயம் நடக்கும் என்றும், தான் முதல்வர் ஆவேன் என்றும் சூசகமாக தெரிவித்தார்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆம்! அதிசயம் நிகழும். 'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும். என்று ரஜினியின் பேச்சினை விமர்சித்துள்ளார்.