தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் 2017-2018-ம் நிதியாண்டில் 8.55 சதவிகிதம் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவந்தது. இந்நிலையில், தற்போது அதில் 0.10 சதவிகிதம் உயர்த்தி 2018-2019 நிதியாண்டிற்கு 8.65 சதவிகிதமாக அதிகரித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
கடந்த மூன்று நிதியாண்டுகளாக உயர்த்தப்படாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த 8.65 சதவிகிதம், 2018-2019 நிதியாண்டுக் கணக்கிலிருந்து அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித அதிகரிப்பு வாயிலாக சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நிதியாண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் எப்படி இருந்தது என்பதன் புள்ளிவிவரம்,
2012-2013 நிதியாண்டில் - 8.50%
2013-2014 நிதியாண்டில் - 8.75%
2014-2015 நிதியாண்டில் - 8.75%
2015-2016 நிதியாண்டில் - 8.80%
2016-2017 நிதியாண்டில் - 8.65%
2017-2018 நிதியாண்டில் - 8.55%
2018-2019 நிதியாண்டில் - 8.65%